இத் தளம் ஜோதிடம் பயில விரும்புவோர்; ஜாதக பலன் தெரிந்து கொள்ள விரும்புவோர் மற்றும் ஜோதிட சிந்தனையாளருக்கு பயன் தரும்.சிறந்த படைப்புகளுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.
S.R.அருள்வேல்; srarulvelu@yahoo.com; srarulvel@gmail.com; +91(0) 98428 41497

உயர்நிலை ஜோதிட வகுப்பு


 ஆன்மிகன் ஜோதிட குழுமம்
அய்யம்பாளையம்
திண்டுக்கல் மாவட்டம்
Cell: 98428 41497; srarulvelu@yahoo.com; face book id: arul vel
ஊருக்கு ஒரு ஜோதிடர் திட்டம்

அன்புடையீர்,

வணக்கம்.
நமது ஆன்மிகன் ஜோதிட குழுமம் தகுதியான ஜோதிடர்களை உருவாக்க வேண்டுமென்ற ஆவலில் கீழ்கண்ட சிறந்த ஜோதிட நூல்களை வெளியிட்டும்; தபால் வழி மற்றும் நேரடி ஜோதிட வகுப்புகளை நடத்தி வருவதை நீங்கள் அறிந்திருக்க கூடும்.

கிரக தத்துவம் (வானியலும் ஜோதிடமும்)

ஸ்ரீ ராஜ ஜோதிடம் (பலன் சொல்லும் முறை)

வாக்கிய பஞ்சாங்க கணிதம் (வாக்கிய பஞ்சாங்கமே கணிக்கும் முறை)

திருக்கணித பஞ்சாங்க கணிதம் (திருக்கணித பஞ்சாங்கமே கணிக்கும் முறை)

ஆன்மிகன் எபிமெரிஸ் பஞ்சாங்கம்1935 – 2042  (3 தொகுதிகள்)

ஜாதக மென்பொருள்

தற்போது நேரடி உயர்நிலை ஜோதிட வகுப்பு நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.  

இம்முறை மூலம் 90 முதல் 95 சதவிகித பலனை எளிதாக கூற முடியும். இம்முறை

இன்றுவரையுள்ள அனைத்து முறைகளைவிட மேலானது.


ஒரு நிமிட வித்தியாசத்தில் பிறந்தோருக்கும் எளிதாக பலன் சொல்லலாம். பலன்களை 

கம்ப்யூட்டர் திரையில் காணலாம். ஜாதக புத்தகமாக அச்சிட்டும் தரலாம். நீங்கள் 

கணிக்க வேண்டியதென எதுவும் இருக்காது.


பலன் சொல்வதற்கு நீங்கள் 12 வீடுகளின் காரகங்கள்; 9 கிரகங்களின் காரகங்கள்;  

12 இராசிகளின் தன்மைகள் பற்றி தெரிந்திருந்தால் போதும். இதுபற்றி விரிவாக 

கற்பிக்கப்படும்.


இப்பயிற்சியில் கலந்து கொள்வது மூலம், நியுமெரலாஜி, பஞ்சபட்சி, வாஸ்து

ஆருடம்பரிகாரம் முறைகளின் சூட்சுமங்களை அறியலாம். இவ்வகுப்பில் கலந்து 

கொண்டால் வேறு ஜோதிட வகுப்பிற்கு செல்ல வேண்டியதில்லை. புத்தகங்கள் 

வாங்க வேண்டியதும் இல்லை.


தபால்துறை பின்கோடு அடிப்படையில் ஒரு பின்கோடுக்கு ஒருவருக்கு மட்டுமே 

கற்றுத்தரப் படும். உதாரணமாக தங்கள் ஊரின் பின்கோட் 624204 என வைத்துக் 

கொள்வோம். இப்பகுதிக்கு ஒருவருக்கு மட்டுமே கற்பிக்கப்படும். மூன்று 

வருடங்களுக்கு பின்பே அடுத்தவருக்கு வாய்ப்பு தரப்படும்.


           பயிற்சியில் திருப்தி இல்லையென்றால் பணம் வாபஸ் செய்யப்படும்.

2 நாள் பயிற்சியில் மென்பொருள்,புத்தகம்,பயிற்சி,உணவு,தங்கும் வசதி வழங்கப்படும். சிறப்பு விழாவில் “ஜோதிடஸ்ரீ” சான்றிதழ் வழங்கப்படும்.




கட்டணம்: ரூ 10,000/- (ரூ 500/- முன்பணம் செலுத்த வேண்டும். மீதி

தொகையை பயிற்சி தினத்தில் தர வேண்டும்.)


பயிற்சி நாள்: 2017 செப்டம்பர் 9,10; (சனி,ஞாயிறு)

இடம்: அக்ஷயா லாட்ஜ், காந்தி சாலை, பஸ் ஸ்டாண்டு சமீபம், பழனி.


மேலும் விபரங்களுக்கு 9842841497-க்கு அழைக்கவும். இதை படித்தபின் 
நண்பர்களுக்கு பகிரவும் (share) நன்றி

ஒரு நிமிட வித்தியாசத்தில் பிறந்த இரு குழந்தைகளின் 

ஜாதகங்கள். மணி 1.15க்கு பிறந்தவர் ஆரோக்யமாக உள்ளார். நன்கு 

படித்து வேளையில் உள்ளார். மணி 1.16க்கு பிறந்தவர் ஆரோக்யம் 

மற்றும் படிப்பு குறைந்தவராக உள்ளார்.இதற்கான காரணகாரியத்தை

அறிய, இருவர் ஜாதகங்களிலும் ஒவ்வொரு வீடும் தொடர்பு பெறும் வீடு 

மற்றும் தசை பலன் பகுதியை பார்த்தாலே புரிந்து விடும்.




ஜாதகத்தில் திருமணத்திற்கு முக்கிய வீடுகளான2,7,12ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு.இதுவரை திருமணம் இல்லை.

இராசிகளின் குணம்

மேஷம்.......துணிவே துணை

ரிஷ்பம்........நிதானம் பிரதானம்

மிதுனம்......அறிவே ஆற்றல்

கடகம்..........அன்பே தெய்வம்


சிம்மம்.........நானே ராஜா,நானே மந்திரி


கன்னி...........கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு

துலாம்...........கூட்டுறவே நாட்டுயர்வு

விருச்சிகம்...புதிரா! புனிதமா!!

தனுசு.............வாய்மையே வெல்லும்

மகரம்...........முயற்சி திருவினையாக்கும்.

கும்பம்..........வாழ்க வையகம்,வாழ்க வளமுடன்

மீனம்............தனிமையே இன்பம்.

இராகு காலம்

இராகு காலம் பாகம் 1

ஜாமக்கோள் ஆருட முறையில் மீனம் இராசி காலை மணி 6.00 முதல் 7.30ஐ குறிக்கும். மகரம் 7.30-9.00; தனுசு 9.00-10.30; துலாம் 10.30-12.00; கன்னி 12.001.30; கடகம் 1.30-3.00; மிதுனம் 3.00-4.30; மேசம் 4.30-6.00ஐ குறிக்கும். 

மேலும் ஜாமக்கோள் ஆருட முறையில் கிரகவரிசை, சூரியன், செவ்வாய், குரு, புதன், சுக்கிரன், சனி, சந்திரன், இராகு என இருக்கும்.


முதலில் கிழமை அதிபதியை மீனத்தில் நிறுத்தவும்.உதாரணமாக இன்று வியாழக்கிழமையாக இருந்தால் குருவை மீனத்தில் நிறுத்தவும். அதன்பின் பிற கிரகங்களை மேற்கண்ட கிரக வரிசைப்படி மகரம்,தனுசு,துலாம்,கன்னி,கடகம்,மிதுனம்,மேசம் இராசிகளில் குறிக்கவும்.
இதன்படி ஞாயிறுகிழமை, சூரியனை மீனத்தில் நிறுத்தியபின் செவ்வாயை மகரத்தில் நிறுத்த வேண்டும். இதேபோல் பிறகிரகங்களை மேற்சொன்னபடி நிறுத்த இராகு மேஷ இராசியில் இருப்பார். மேச இராசி, மாலை மணி 4.30 முதல் 6.00ஐ குறிக்கும். எனவே ஞாயிறுகிழமை மணி 4.30 முதல் 6.00 வரை இராகு காலம் ஆகும். இதேபோல் பிற கிழமைகளுக்கும் அமையும். முயன்று பாருங்கள்.

இராகு காலம் பாகம் 2

சூரியன் முதல் சனி வரையுள்ள கிரகங்களுக்கு கிழமைகள் உள்ளன. இராகு கேதுவுக்கு இல்லை. கெளரி பஞ்சாங்கத்தில் ஒவ்வொரு கிழமையிலும் உத்யோகம் எனும் சூரியன் முதல் சோரம் எனும் சனி வரை ஏழு கிரகங்கள் உள்ளன.பகல் பொழுதின் எட்டு ஜாமங்களை ஏழு கிரகங்கள் ஆட்சி செய்த்துபோக எட்டாம் ஜாமத்தை இராகு ஆட்சி செய்யும்.இக்காலம் கெளரி பஞ்சாங்கத்தில் விஷம் என இருக்கும்.காலன்,சூரியன் மகனாக கருதப்படுகிறார்.அர்தபிரகணன்,புதன் மகனாகவும்; எமகண்டன், குரு மகனாகவும்;குளிகை,சனி மகனாகவும் போற்றப்படுகின்றனர்.மேற்படி மகன்களுக்கு தம் தந்தையின் கிழமையின் முதல் ஜாமம் (மணி 6.00-7.30) ஒதுக்கப்பட்டுள்ளது.பிற கிழமைகளில் மேற்படி மகன்களின் ஆதிக்க நேரத்தை தெரிந்து கொள்ள, கிழமைகளின் பிற்போக்கு வசத்தில் எண்ணி பார்க்க வேண்டும்.



உதாரணமாக ஞாயிற்றுகிழமைக்கு பிற்போக்கு வசத்தில் உள்ள கிழமைகள் சனி,வெள்ளி,வியாழன்...ஆகும்.என்வே ஞாயிறு காலை மணி 6.00 முதல் 7.30 வரை காலன் நேரம் ஆகும். சனிக்கிழமை மணி 7.30 முதல் 9.00வரையும்;  வெள்ளி கிழமை 9.00 முதல் 10.30 காலன் நேரம்  ஆகும்.இதேபோல் பிற கிரகங்களுக்கும் அறியலாம்.
அனைத்து தினசாி காலண்டாிலும் மாத காலண்டாிலும் உள்ளதே-என்பதற்காக காரணத்தை தெரிந்து கொள்ளாமல் இருக்கக்கூடாது...ஒவ்வொரு கிரகத்திற்கும் பார்வைகள், அனைத்து ஜோதிட நூல்களிலும் உள்ளதே..அதற்கான காரணம் தெரிந்து கொள்ள வேண்டாமா...காரண காரியம் தெரிந்தால்தான் புதிய விதிகளை வகுக்க முடியும். இராகு மற்றும் இராகு காலத்தை புரிந்து கொண்டதால் சொல்கிறேன்...ஒருவர் ஜாதகத்தில் இராகு நன்மை தரும் அமைப்பில் இருந்தால்,அவ்வீட்டு காரக வேலைகளை இராகு காலத்தில் செய்ய முழு பலன் கிடைக்கும்.இராகு தீமை தரும் அமைப்பில் இருந்தால்,அவ்வீட்டு காரக வேலைகளை இராகு காலத்தில் செய்யாமல் தவிர்ப்பதே பரிகாரம் ஆகும்.மேலும் தெளிவு பெற 9842841497க்கு அழைக்கவும்