இத் தளம் ஜோதிடம் பயில விரும்புவோர்; ஜாதக பலன் தெரிந்து கொள்ள விரும்புவோர் மற்றும் ஜோதிட சிந்தனையாளருக்கு பயன் தரும்.சிறந்த படைப்புகளுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.
S.R.அருள்வேல்; srarulvelu@yahoo.com; srarulvel@gmail.com; +91(0) 98428 41497

ஒரு நிமிட வித்தியாசத்தில் பிறந்த இரு குழந்தைகளின் 

ஜாதகங்கள். மணி 1.15க்கு பிறந்தவர் ஆரோக்யமாக உள்ளார். நன்கு 

படித்து வேளையில் உள்ளார். மணி 1.16க்கு பிறந்தவர் ஆரோக்யம் 

மற்றும் படிப்பு குறைந்தவராக உள்ளார்.இதற்கான காரணகாரியத்தை

அறிய, இருவர் ஜாதகங்களிலும் ஒவ்வொரு வீடும் தொடர்பு பெறும் வீடு 

மற்றும் தசை பலன் பகுதியை பார்த்தாலே புரிந்து விடும்.




ஜாதகத்தில் திருமணத்திற்கு முக்கிய வீடுகளான2,7,12ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு.இதுவரை திருமணம் இல்லை.

இராசிகளின் குணம்

மேஷம்.......துணிவே துணை

ரிஷ்பம்........நிதானம் பிரதானம்

மிதுனம்......அறிவே ஆற்றல்

கடகம்..........அன்பே தெய்வம்


சிம்மம்.........நானே ராஜா,நானே மந்திரி


கன்னி...........கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு

துலாம்...........கூட்டுறவே நாட்டுயர்வு

விருச்சிகம்...புதிரா! புனிதமா!!

தனுசு.............வாய்மையே வெல்லும்

மகரம்...........முயற்சி திருவினையாக்கும்.

கும்பம்..........வாழ்க வையகம்,வாழ்க வளமுடன்

மீனம்............தனிமையே இன்பம்.

இராகு காலம்

இராகு காலம் பாகம் 1

ஜாமக்கோள் ஆருட முறையில் மீனம் இராசி காலை மணி 6.00 முதல் 7.30ஐ குறிக்கும். மகரம் 7.30-9.00; தனுசு 9.00-10.30; துலாம் 10.30-12.00; கன்னி 12.001.30; கடகம் 1.30-3.00; மிதுனம் 3.00-4.30; மேசம் 4.30-6.00ஐ குறிக்கும். 

மேலும் ஜாமக்கோள் ஆருட முறையில் கிரகவரிசை, சூரியன், செவ்வாய், குரு, புதன், சுக்கிரன், சனி, சந்திரன், இராகு என இருக்கும்.


முதலில் கிழமை அதிபதியை மீனத்தில் நிறுத்தவும்.உதாரணமாக இன்று வியாழக்கிழமையாக இருந்தால் குருவை மீனத்தில் நிறுத்தவும். அதன்பின் பிற கிரகங்களை மேற்கண்ட கிரக வரிசைப்படி மகரம்,தனுசு,துலாம்,கன்னி,கடகம்,மிதுனம்,மேசம் இராசிகளில் குறிக்கவும்.
இதன்படி ஞாயிறுகிழமை, சூரியனை மீனத்தில் நிறுத்தியபின் செவ்வாயை மகரத்தில் நிறுத்த வேண்டும். இதேபோல் பிறகிரகங்களை மேற்சொன்னபடி நிறுத்த இராகு மேஷ இராசியில் இருப்பார். மேச இராசி, மாலை மணி 4.30 முதல் 6.00ஐ குறிக்கும். எனவே ஞாயிறுகிழமை மணி 4.30 முதல் 6.00 வரை இராகு காலம் ஆகும். இதேபோல் பிற கிழமைகளுக்கும் அமையும். முயன்று பாருங்கள்.

இராகு காலம் பாகம் 2

சூரியன் முதல் சனி வரையுள்ள கிரகங்களுக்கு கிழமைகள் உள்ளன. இராகு கேதுவுக்கு இல்லை. கெளரி பஞ்சாங்கத்தில் ஒவ்வொரு கிழமையிலும் உத்யோகம் எனும் சூரியன் முதல் சோரம் எனும் சனி வரை ஏழு கிரகங்கள் உள்ளன.பகல் பொழுதின் எட்டு ஜாமங்களை ஏழு கிரகங்கள் ஆட்சி செய்த்துபோக எட்டாம் ஜாமத்தை இராகு ஆட்சி செய்யும்.இக்காலம் கெளரி பஞ்சாங்கத்தில் விஷம் என இருக்கும்.காலன்,சூரியன் மகனாக கருதப்படுகிறார்.அர்தபிரகணன்,புதன் மகனாகவும்; எமகண்டன், குரு மகனாகவும்;குளிகை,சனி மகனாகவும் போற்றப்படுகின்றனர்.மேற்படி மகன்களுக்கு தம் தந்தையின் கிழமையின் முதல் ஜாமம் (மணி 6.00-7.30) ஒதுக்கப்பட்டுள்ளது.பிற கிழமைகளில் மேற்படி மகன்களின் ஆதிக்க நேரத்தை தெரிந்து கொள்ள, கிழமைகளின் பிற்போக்கு வசத்தில் எண்ணி பார்க்க வேண்டும்.



உதாரணமாக ஞாயிற்றுகிழமைக்கு பிற்போக்கு வசத்தில் உள்ள கிழமைகள் சனி,வெள்ளி,வியாழன்...ஆகும்.என்வே ஞாயிறு காலை மணி 6.00 முதல் 7.30 வரை காலன் நேரம் ஆகும். சனிக்கிழமை மணி 7.30 முதல் 9.00வரையும்;  வெள்ளி கிழமை 9.00 முதல் 10.30 காலன் நேரம்  ஆகும்.இதேபோல் பிற கிரகங்களுக்கும் அறியலாம்.
அனைத்து தினசாி காலண்டாிலும் மாத காலண்டாிலும் உள்ளதே-என்பதற்காக காரணத்தை தெரிந்து கொள்ளாமல் இருக்கக்கூடாது...ஒவ்வொரு கிரகத்திற்கும் பார்வைகள், அனைத்து ஜோதிட நூல்களிலும் உள்ளதே..அதற்கான காரணம் தெரிந்து கொள்ள வேண்டாமா...காரண காரியம் தெரிந்தால்தான் புதிய விதிகளை வகுக்க முடியும். இராகு மற்றும் இராகு காலத்தை புரிந்து கொண்டதால் சொல்கிறேன்...ஒருவர் ஜாதகத்தில் இராகு நன்மை தரும் அமைப்பில் இருந்தால்,அவ்வீட்டு காரக வேலைகளை இராகு காலத்தில் செய்ய முழு பலன் கிடைக்கும்.இராகு தீமை தரும் அமைப்பில் இருந்தால்,அவ்வீட்டு காரக வேலைகளை இராகு காலத்தில் செய்யாமல் தவிர்ப்பதே பரிகாரம் ஆகும்.மேலும் தெளிவு பெற 9842841497க்கு அழைக்கவும்

ஜோதிடம்-வீட்டின் அதிபதி யார் –பாகம் 1

ஜோதிடம்

வீட்டின் அதிபதி யார் –பாகம் 1


இராசி ஜோதிடம்

நாம் ஜோதிடம் பயில தொடங்கியபோது ’மேச இராசி அதிபதி செவ்வாய்; ரிஷ்ப இராசி அதிபதி, சுக்கிரன்’ என்றும்: ‘மேச லக்னத்திற்கு 9ம் அதிபதி குரு; 10ம் அதிபதி சனி’ என்றும் பழகினோம்.

பலன் சொல்லும்போது வீட்டு அதிபதி எங்கு உள்ளார்? அவ்வீட்டில் யார் அமர்ந்துள்ளார்? அவ்வீட்டை யார் பார்க்கிறாரென கவனித்து பலன் சொன்னோம். எனவே இம்முறையை ‘இராசி ஜோதிடம்’ என்போம். இது இள நிலை ஆகும்.

சார ஜோதிடம்

இராசி ஜோதிடத்திற்கு மேல்நிலை சார ஜோதிடம் ஆகும். இம்முறையில் லக்னம் இருக்கும் இராசி அதிபதிக்கு முக்கியத்துவம் தருவதில்லை. அதற்குப்பதிலாக லக்னம் இருக்கும் நட்சத்திரத்தையும்; அந்த நட்சத்திரத்தின் அதிபதி இருக்கும் நிலை அறிந்தும் பலன் சொல்வோம். மேலும் ஒரு கிரகம் எந்த இராசியில் இருந்தாலும் அதற்கு முக்கியத்துவம் தராமல் அக்கிரகம் இருக்கும் நட்சத்திர அதிபதிக்கு முக்கியத்துவம் தந்து, அந்த நட்சத்திர அதிபதி இருக்கும் நிலை அறிந்து பலன் சொல்வோம். 

உதாரணமாக கடக இராசியில் லக்னம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இராசி ஜோதிட முறையில், இதன் அதிபதி சந்திரன் ஆவார். சார ஜோதிட முறைக்கு இது தேவையில்லை. ஏனெனில் கடக இராசியில் புனர்பூசம். பூசம், ஆயில்யம் என மூன்று நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றின் அதிபதி முறையே குரு,சனி மற்றும் புதன் ஆவர். இம்மூவரில் யாருடைய சாரத்தில் லக்னம் உள்ளதென கவனித்து பலன் சொல்கிறோம்.

நட்சத்திர அதிபதியையே சாரம் என்கிறோம். எனவே இம்முறையை சார ஜோதிடம் என்போம். இது இடைநிலை ஆகும்.

உயர்நிலை

இடைநிலைக்கு மேல்நிலை, உயர்நிலை ஆகும். இம்முறையில் ஒரு நட்சத்திரத்தின் கோண அளவான பாகை 13.20-ஐ 9 பாகங்களாக பிரித்து ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு கிரகத்தை அதிபதியாக நியமித்துள்ளனர். இது விம்சோத்தரி தசை முறையை அடிப்படையாக கொண்டது. இதுபற்றி பின்னால் விளக்கப்படும்.

காரணம்

இனி இம்முறையை உயர்நிலை என அழைப்பதற்கான காரணத்தை காண்போம்.பூமியின் சுழற்சியே லக்ன கணிதத்திற்கு ஆதாரம் ஆகும்.  பூமி ஒரு முறை சுழல, 23 மணி, 56 நிமிடங்கள் ஆகிறது. இவ்வாறு பூமி சுழலும்போது, பூமியில் உள்ள நபர், பூமியை சுற்றியுள்ள 12 இராசிகள்; 27 நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களை காண்பார்.

சுமார் 24 மணி நேரத்தில் 12 இராசிகளை காண்பதால், ஓர் இராசியை முழுவதுமாக காண, 2 மணி நேரம் (120 நிமிடங்கள்) ஆகும். அவ்வாறு காணும்போது பூமியில் உள்ள நபருக்கு கிழக்கு திசையில் தெரியும் இராசியையே, லக்னம் என்கிறோம். இதையே முதல் வீடு என்றும் சொல்கிறோம்.

ஓர் இராசிக்கு 30 பாகைகள் ஆகும். ஓர் இராசியை முழுவதும் காண 2 மணி நேரம் எனும் 120 நிமிடங்கள் ஆகுமென சற்றுமுன் பார்த்தோம். எனவே ஒரு பாகையை கடக்க 4 நிமிடங்கள் ஆகும். எனவே ஒரு நட்சத்திரத்தின் கோண அளவான பாகை 13.20-ஐ கடக்க 53 நிமிடங்கள் ஆகும்.

இனி முக்கிய விசயத்திற்கு வருவோம். கவனமாக படிக்கவும். இராசி ஜோதிட முறையில் ஓர் இராசியே இரண்டு மணி நேரத்திற்கு லக்னமாக இருக்கும். ஆனால் சார ஜோதிட முறையில் ஒரு நட்சத்திரம், 53 நிமிடங்களுக்கு லக்ன நட்சத்திரமாக இருக்கும்.

உதாரணமாக இப்போது காலை மணி 6.00 என்றும்; இப்போதுதான் மேச இராசி லக்னமாக தொடங்கியதாக வைத்துக் கொள்வோம். எனவே சுமார் மணி 8.00 வரை மேசம் இராசியே லக்னமாக இருக்கும். இராசி ஜோதிட முறையில் மேச லக்னத்தின் அதிபதி செவ்வாய் என்போம்.

இனி சார ஜோதிடத்திற்கு வருவோம்.இப்போது காலை மணி 6.00 என்றும்; இப்போதுதான் மேச இராசி லக்னமாக தொடங்கியதாக கொள்வோம். மேச இராசியில் அசுவனி, பரணி மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் பகுதியும் உள்ளன. சற்றுமுன் லக்ன நட்சத்திரமாக அமையும் நட்சத்திரம், 53 நிமிடங்களுக்கு லக்ன நட்சத்திரமாக இருக்குமென பார்த்தோம்.

எனவே காலை மணி 6.00 முதல் 6.53 வரை அசுவனி நட்சத்திரமே லக்ன நட்சத்திரமாக இருக்கும். அசுவனி நட்சத்திர அதிபதி கேது ஆவார். எனவே 1ம் வீட்டு அதிபதியாக கேது அமைவார். மணி 6.53 முதல் 7.46 வரை பரணி, லக்ன நட்சத்திரமாக இருக்கும். பரணி நட்சத்திர அதிபதி சுக்கிரன் ஆவார். எனவே மேற்கண்ட நேரத்தில் பிறந்த குழந்தைக்கு சுக்கிரன் 1ம் அதிபதியாக அமைவார். அதன்பின் ஒவ்வொரு 53 நிமிடங்களுக்கும் சூரியன், சந்திரன், செவ்வாய், இராகு, குரு, சனி, புதன் என உடுதசை முறையில் 1ம் அதிபதி மாறுவர்.

ஆனால் நடைமுறையில் இவ்வளவு நேர இடைவெளியில் குழந்தைகள் பிறப்பதில்லை. பெரிய மருத்துவமனைகளில் ஒருசில நிமிட இடைவெளியில் குழந்தைகள் பிறப்பதை காண்கிறோம். இரட்டை குழந்தைகள் கூட ஓருசில நிமிட வித்தியாசத்திலேயே பிறக்கின்றன.

இரட்டை குழந்தைகளுக்கு ஜாதகம் கணிக்கும்போது இராசி, நவாம்சம் தவிர 
பல வர்க்க சக்கரங்கள் ஒன்றுபோலவே இருக்கும்.மேலும் வர்க்க சக்கரங்களை கொண்டு பலன் சொல்வதற்கான விதிமுறைகள் தெளிவாக இல்லை. எனவே தற்போதைய ஜோதிட முறையை மேம்படுத்த வேண்டிய அவசியம் உண்டாகிறது.

இதற்கு விம்சோத்தரி தசை முறை அடிப்படையாக அமைகிறது. முதலாவதாக விம்சோத்தரி தசையில் உள்ள கிரக வரிசை பயன்படுத்தப்படுகிறது. விம்சோத்தரி தசை முறையில் தசைகள் கேது, சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய், இராகு, குரு, சனி, புதன்...எனும் வரிசையில் அமையும். கேது தசையில் முதல் புத்தி கேது புத்தியும்; அதை தொடர்ந்து சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய், இராகு, குரு, சனி, புதன் புத்திகள் அமையும். சுக்கிரன் தசையில் முதல் புத்தி சுக்கிரன் புத்தியும்;அதை தொடர்ந்து சூரியன், சந்திரன், செவ்வாய், இராகு, குரு, சனி, புதன், கேது புத்திகள் அமையும். இதேபோல் ஒவ்வொரு தசையின் முதல் புத்தியாக அந்தந்த தசையே அமையும். அதை தொடர்ந்து வரும் அடுத்தடுத்த புத்திகள் மேற்சொன்ன விம்சோத்தரி தசை முறையில் அமையும். 

அடுத்தபடியாக ஒரு நட்சத்திரத்தின் அளவான பாகை 13.20, ஒவ்வொரு கிரகத்திற்கும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தசை வருட அடிப்படையில் 9 பாகங்களாக (புத்திகளாக) பிரிக்கப்படுகிறது. (தொடரும்)


உயர்நிலை ஜோதிட பயிற்சி:

                                உயர்நிலை ஜோதிட பயிற்சி


இத்துடன் இணைத்துள்ள படத்தை பாருங்கள்.பிறந்த தேதி,நேரம் மற்றும் ஊரை கொடுத்தவுடன் 12 வீட்டு பலன்;தசை,புத்தி பலன்;கோச்சார பலன் போன்றவை தங்கள் முன் ஜொலிக்கும்.ஜாதக பலன்களையும் திரையில் காணலாம்.




நாம் தெரிந்துகொள்ள வேண்டியதெல்லாம் 12 வீடுகளின் முக்கிய காரகங்கள், 9 கிரகங்களின் முக்கிய காரகங்கள் மற்றும் 12 இராசிகளின் தன்மைகள் மட்டுமே.

இம்முறை பாரம்பரிய இந்திய ஜோதிடம், மேல்நாட்டு ஜோதிடம், கே.பி ஜோதிடம் போன்றவற்றை விட பன்மடங்கு மேலானது.

ஜாதகரின் குணம், கல்வி, பொருளாதார நிலை, உடம்பில் மச்சம்,காயம் இருக்கும்இடம், வாழ்க்கைத் துணைவரின் உறவு (சொந்தம்,அன்னியம்),
வாழ்க்கைத்துணவர் ஊர் அல்லது வீட்டின் திசை, குணம், பொருளாதாரநிலை, பிறக்கப்போகும்குழந்தையின் பாலினம் (ஆண்,பெண்), அதிர்ஷ்ட எண்,கிரகம், தெய்வம், உணவு, வாஸ்து போன்றவற்றை அறியலாம்.

குறிப்பிட்ட நாளில் மட்டுமே நேரடி வகுப்பு - என்ற நிலை இல்லை. சந்தேகம் ஏற்படும்போது தொலைபேசி மூலமாக தெளிவு பெறலாம். பிரதி வாரம் சனி அல்லது ஞாயிறு கிழமையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்கும். கலந்து கொண்டு பயன் பெறலாம். எனது ஜோதிட சிந்தனைகள் உடனுக்குடன் உங்களுக்கு வழங்கப்படும்.

ஜோதிடத்தில் உண்மை, நேர்மை, தூய்மையை விரும்புவோருக்கு உறுதுணையாக இருக்கும்.


ஷாஃப்ட்வேர், பயிற்சி புத்தகம், 36 வருட பஞ்சாங்கம் வழங்கப்படும்.

கட்டணம்:ரூ10,000; வெளிநாட்டு அன்பர்களுக்கு ரூ12,000 மட்டும்.

பயிற்சியில் திருப்தி இல்லையென்றால் பணம் வாபஸ் செய்யப்படும். சிறந்த ஜோதிட சிந்தனையாளருக்கு அன்பளிப்பு வழங்கப்படும். வேறு பயிற்சியோ,புத்தகமோ வாங்க வேண்டியதில்லை.


மேலும் விளக்கம் பெற +91 (0) 98428 41497-ல் அழைக்கவும்.


email: srarulvelu@yahoo.com 


நன்றி. 

இறையருள் என்றும் நம் துணை நிற்கும்.